காரில் இருக்கும் ஆயுதம்.! பகிரங்கமாக அறிவித்த அர்ச்சுனா எம்.பி
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், தனது சொந்த பாதுகாப்பிற்காக தனது வாகனத்தில் வாள் ஒன்றை வைத்திருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எழுத்துப்பூர்வமாக இரண்டு முறை பாதுகாப்பு கோரிய போதிலும், இதுவரை அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புக்காக துப்பாக்கி கோரியதாகவும், அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
காவல்துறை மா அதிபருக்கும் அறிவிப்பு
காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் ஸ்ப்ரே துப்பாக்கியை கோரியிருந்தாலும், அதற்கும் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை எனவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தனது சொந்த பாதுகாப்பிற்காக ஒரு வாளை வைத்திருப்பதாகவும், அது எப்போதும் தனது காரில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக சபாநாயகர் மற்றும் காவல்துறை மா அதிபருக்குத் தெரிவித்துள்ளதாகவும் அர்ச்சுனா மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |