சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் உற்பத்தியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு காணியில் இருந்து இரண்டு தங்க நிற மெகசின்கள், ஒரு 9 மி.மீ பிஸ்டல், ஒரு கைக்குண்டு மற்றும் 115, T-56 தோட்டாக்கள் ஆகியவை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்கள் சம்பத் மனம் பேரி என்பவருக்கு சொந்தமானவை என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட் ஆயுதங்கள்
பெக்கோ சமன் மற்றும் சம்பத் மனம்பேரியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின்படி, இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெக்கோ சமன் இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை 2 மாதங்களுக்கு முன்பு சம்பத் மனம்பேரியிடம் கொடுத்ததாகவும், அவை அவரது நெருங்கிய ஒருவரின் வீட்டில் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போதைப்பொருள் இரசாயனங்கள் அடங்கிய புதைக்கப்பட்ட கொள்கலன்களை மீட்டெடுத்தமை தொடர்பாக சம்பத் மனம்பேரி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
