கொழும்பில் மயானம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! தீவிரமாகும் விசாரணை
கொழும்பு - ஹங்வெல்ல பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மீட்டுள்ளது.
இதில் T-56 ரக துப்பாக்கி, ரிப்பீட்டர் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த பஸ் லலித்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட துப்பாக்கிகள்
மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விதம் மற்றும் அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி குறித்த சந்தேகநபர் டுபாயில் இருந்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |