வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Sri Lanka
Department of Meteorology
Weather
By Shalini Balachandran
வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று (01-10-2026) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளைய (02-10-2026) தினத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான வானிலை
இதற்கமைய வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொணராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண்(அதாவது மனித உடலுக்கு உணரும் வெப்பம்) அவதானம் செலுத்த வேண்டியமட்டத்தில் காணப்படலாம் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இந்த வெப்பமான வானிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்