உச்சம் தொடும் வெப்பம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Jaffna Climate Change Heat wave Weather
By Thulsi Mar 31, 2025 03:50 AM GMT
Report

புதிய இணைப்பு

தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (31.03.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (31) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும்.

குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், இந்த நிலைமை அடுத்த சில நாட்களிலும் எதிர்பார்க்கப்படலாம்." இதற்கு பிரதான காரணம் பருவகால சூழ்நிலையாகும்.

உச்சம் தொடும் வெப்பம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Weather Forecast For The Next 36 Hours

இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பநிலை மனித உடலால் உணரப்படும் அளவிற்கு இருக்கும், எனவே மக்கள், வெட்டவெளிகளில் வேலை செய்பவர்கள், போதியளவு திரவங்கள் மற்றும் நீரை அருந்த வேண்டும்.   

முடிந்த போதெல்லாம், நிழலான இடத்தில் ஓய்வெடுக்கவும். நீங்கள் வெளிர் நிற ஆடைகளை அணியலாம். "நோயுற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என  மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு 

நாட்டின் பல பகுதிகளில் நாளை (31) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (30.03.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட கொடுப்பனவுகள்...! போராட்டத்தில் குதிக்கும் ஊழியர்கள்

குறைக்கப்பட்ட கொடுப்பனவுகள்...! போராட்டத்தில் குதிக்கும் ஊழியர்கள்

முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள்

இது மனித உடலால் உணரப்படக்கூடிய அளவிற்கு அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

உச்சம் தொடும் வெப்பம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Weather Forecast For The Next 36 Hours

இந்த சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது முக்கியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வெப்பமான வானிலை காரணமாக வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ் - திருச்சி நேரடி விமான சேவை இன்று முதல்

யாழ் - திருச்சி நேரடி விமான சேவை இன்று முதல்

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி