கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை
Kilinochchi
Mullaitivu
Weather
By Shalini Balachandran
கிளிநொச்சி (kilinochchi) மற்றும் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் இதனை சுட்டிக்காட்டியே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 27 ஆம் தேதி வரை மழை தொடருமெனவும் மற்றும் 24 முதல் 27 வரை மிகவும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
இதனால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வீட்டின் அருகிலும் சாலைகளிலும் உள்ள வடிகால்களை சுத்தப்படுத்துங்கள்.
- சிரமமாக இருந்தால் கிராமநிலதாரியிடம் தகவல் வழங்கி உதவுங்கள்.
- மழை நீடித்தால் 3 தொடக்கம் 4 நாட்களுக்கு தேவையான உலர் உணவுகளை சேமித்து வையுங்கள்.
- குழந்தைகளை வெள்ளநீரில் விளையாட விடாதீர்கள்.
மேலும், பாதுகாப்பான குடிநீரை மட்டும் பருக வேண்டும் எனவும் விழிப்புடன் இருப்பதுடன் ஒத்துழைத்திட நன்றி என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 19 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்