பிரித்தானியா வாழ் மக்களுக்கு ஓர் பேராபத்து - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை
பிரித்தானியாவில் சில பகுதிகளில் ஓட்டோ புயலின் தாக்கம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
பலத்த காற்று காரணமாக பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் எச்சரிக்கபட்டுள்ளது.
மேலும், ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதிகள் சில மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளில் 75 மைல் வேகத்திற்கு அதிகமாக காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளது.
மேலும்,சில இடங்களில் மின்சாரமும், சில இடங்களில் தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்படலாம் என்றும் சாலை, தொடருந்து மற்றும் படகுப் போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
