வங்காள விரிகுடாவில் மேலடுக்கு சுழற்சி - வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..!
Sri Lanka
TN Weather
Weather
By pavan
வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதனால் இன்று (18) முதல் எதிர்வரும் 23.06.2023 வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மேக மூட்டத்துடன் கூடிய வானிலை காணப்படும்.
வடக்கு மாகாணம்
அத்துடன் இக்காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு பரவலாக மிதமான மழை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
