உடல் எடையை இலகுவில் குறைக்க வேண்டுமா : ஒரே வழி இதோ !
உடல் எடையை அதிகரிப்பால் சிரமப்பட்டு உடல் எடையை குறைக்க கடினமாக போராடுகிறீர்களா? மருத்துவமனைக்கு செல்லாமலேயே உடல் எடையை குறைக்க ஒரு எளிய தீர்வு உள்ளது.
சியா விதைகள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து தயாரிக்கப்படும் பானங்கள் உங்கள் உடல் பருமனை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
சியா விதை பானம்
சியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது சர்க்கரை இல்லாத பாதாம் பாலுடன் கலக்கவும்.
விதைகள் ஜெல் போல மாறும் வரை சில நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
அதை குடிப்பதற்கு முன் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும் பொதுவாக சியா விதைகள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானவை.
ஆனால் அவற்றை எடுத்துக் கொள்வதற் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
இரண்டுமே கலோரிகள் நிறைந்தவை எனவே இதை அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.
ஆப்பிள் சைடர் டீ
ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தேன் கலந்த தேநீரை தயாரிக்க, ஒரு கப் சூடான நீரில் ஒன்று தொடக்கம் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் ஒன்று மற்றும் இரண்டும் டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதை காலையில் அல்லது உணவுக்கு முன் குடிக்கவும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் தேனின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |