சமன்த மற்றும் நாமல் உட்பட ஐவர் பொலிசாரால் கைது!
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டிலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்கள் என்ற காரணத்திற்காகவும் மக்கள் விடுதலை முன்னிணியின் சமன்த மற்றும் நாமல் கருணாரத்ன ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார நடைமுறைகளையும் சட்டங்களையும் மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சமன்த வித்யாரத்ன,, தேசிய விவசாயிகள் சங்கத்தின் பிரதம ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன உட்பட ஐவர் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இதன்போதே இவர்களை பொரலந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். இம்மாதம் முதலாம் திகதி போகாகும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலந்த நகரில் விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார்கள் என்ற குற்றுச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இரசாயன உர தடடுப்பாடு மற்றும் விவசாயிகளின் பொருளாதாரம் உட்பட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று மாலை வெலிமடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.