ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம் - பெரும் துயரத்தில் பெற்றோர்
வவுனியா, பம்பைபடு, பெரியகட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டப்பட்டு வந்த கோழிக்கூட்டின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒன்றரை வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் மற்றும் குடியிருப்பாளர்கள் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந் நிலையில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்ட செங்கல் சுவரில் இருந்து விழுந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வவுனியா பெரியகட்டு பம்பைமடுவை பகுதியைச் சேர்ந்த சயந்தன் கார்த்திகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுவன் பலத்த காயங்களுடன் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கற்கள் வீழ்ந்து அடியில் இருந்த குழந்தை அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.