பிரித்தானியாவில் வேலை தேடுவோருக்கான தகவல் : நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள்
பிரித்தானியாவில் (UK) பல்வேறு வேலைசார் சட்ட மாற்றங்களானது ஏப்ரல் 2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் ஊதிய உயர்வு, மகப்பேறு மற்றும் நோயாளி சம்பள உயர்வு, மற்றும் நியோனேட்டல் விடுப்பு உள்ளிட்ட முக்கிய வேலை உரிமைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஏப்ரல் மாதம் முதல், தேசிய வாழ்வாதார ஊதியம் மற்றும் குறைந்தபட்ச தேசிய ஊதியம் உயர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம்
தேசிய வாழ்வாதார ஊதியம் £11.44 இலிருந்து £12.21-ஆக உயரும் எனவும், இது ஒரு முழு நேர ஊழியருக்கு வருடத்திற்கு கூடுதலாக £1,400 வரை வருமானம் சேர்க்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 தொடக்கம் 20 வயதுக்குள் உள்ளவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் £8.60 இ லிருந்து £10.00-ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைய தொழிலாளர்களுக்கான மாணவர் ஊதியம் (apprentice) £6.40 இலிருந்து £7.55 ஆக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
