கொழும்பில் மூடிய அறைக்குள் நடந்தது என்ன? சுமந்திரன் வெளியிட்ட தகவல்
கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் மூடிய அறைக்குள் தான் ஏன் கூட்டத்தை நடத்தினார் என்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்.(M.A.Sumanthiran)
நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய அரசாங்கத்திற்கு சில பரிந்துரைகளை முன்வைத்து, கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட 12 பேர் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய ஆகியோரும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கூட்டம் மூடிய அறையில் இடம்பெற்றிருந்தாலும், இரகசிய கூட்டம் இல்லை என்று சுமந்திரன் தெரிவித்தார்.