காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன: உண்மையை கண்டறியுமாறு கோரிக்கை

Sri Lanka Army Jaffna Parliament of Sri Lanka Ranil Wickremesinghe SL Protest
By Shadhu Shanker Nov 16, 2023 09:03 AM GMT
Report

''விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட  உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இராணுவத்தை காப்பாற்றுவதற்காகவே இந்த நஷ்டஈட்டை வழங்க முயற்சிக்கின்றீர்கள்''என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது அதிபர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போன உறவுகளுக்காக மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம்

காணாமல் போன உறவுகளுக்கு

எங்கள் உறவுகள் காணாமல் போனவர்கள் இல்லை.அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.மன்னார் மாவட்டம் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.எமது பிள்ளைகள் உறவுகளை விசாரணைக்காக பிடித்துக்கொண்டு சென்றவர்களே தற்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன: உண்மையை கண்டறியுமாறு கோரிக்கை | What Happened To Missing Relationships In Jaffna

அந்த பிள்ளைகளை தேடியே நாங்கள் இன்று வீதியில் இறங்கி போராடி வருகிறோம்.இராணுவத்திடம் கையளித்த, வீடுகளில் இருந்து இராணுவத்தினரால் பிடித்துக் கொண்டு செல்லப்பட்ட உறவுகள் என அவர்களிடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகிறோம்.

காணாமல் போன உறவுகளுக்கு அரசு உதவிகளை செய்யட்டும்.நாங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவே போராடி வருகிறோம்.

எனவே நாடாளுமன்றத்தில் தமிழ் தெரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவாக விளங்க கூடிய வகையில் எடுத்துக் கூற வேண்டும்.

அதிபருக்கு தமிழ் தெரியாத நிலையில் எமது போராட்டம் குறித்து ஒன்றும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதை நாங்கள் அறிகிறோம்.

அதிகரிக்கப்போகும் வட் வரி: ரணிலின் திட்டம் அம்பலம்

அதிகரிக்கப்போகும் வட் வரி: ரணிலின் திட்டம் அம்பலம்

உண்மை விவரம்

எனவே எமது பிரச்சினையை அவருக்கு தெளிவாக தெரிவியுங்கள் நாங்கள் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி வருகிறோம் என்று. காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை விவரம் எமக்கு தேவை.பிடித்துச் செல்லப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது? என்ற உண்மையை அரசு கண்டறிய வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன: உண்மையை கண்டறியுமாறு கோரிக்கை | What Happened To Missing Relationships In Jaffna

அதன் பின்னர் நீதியை வழங்குங்கள்.அதன் பின்னர் நஷ்ட ஈடு தொடர்பாக கதையுங்கள். இதுவரை நாங்கள் உங்களிடம் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக நஷ்டஈட்டை கேட்கவில்லை.வாழ்வாதாரமும் கேட்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று நீதிக்காகவே கேட்கின்றோம். அவர்கள் இருக்கின்றார்களா? அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள போராடி வருகின்றனர்.

வலி சுமந்த போராட்டங்கள்

காணாமல் போன இராணுவம் அல்லது சிங்கள மக்களுக்கு தாராளமாக உதவி செய்யுங்கள்.தமிழ் இனத்திற்கு உதவி செய்வதாக இருந்தால் முதலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியுங்கள்.உங்களிடமே எமது உறவுகளை கையளித்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன: உண்மையை கண்டறியுமாறு கோரிக்கை | What Happened To Missing Relationships In Jaffna

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக சுமார் 14 வருடங்களாக அம்மாக்கள் வலி சுமந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.எனவே முதலில் உண்மையை கண்டறிய வேண்டும்.அதன் பின்னர் நிதியை வழங்குவதா அல்லது நஷ்டஈட்டை வழங்குவதா என்று முடிவு செய்யுங்கள்.

விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட அல்லது பிடித்துச் செல்லப்பட்ட எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இராணுவத்தை காப்பாற்றுவதற்காகவே இந்த நஷ்டஈட்டை வாழங்க முயற்சிக்கின்றீர்கள் என கருதுகிறோம்.

எனவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியுங்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி நழுவிச் செல்லும் இந்தியா

தமிழ்க் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி நழுவிச் செல்லும் இந்தியா


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020