என்னதான் நடக்கிறது வடக்கு மருத்துவமனைகளில்...பொறுப்பை ஏற்பது யார்..!
வடக்கில் சாவகச்சேரி மருத்துவமனையில் ஏற்பட்ட குழப்பம் இப்போது மன்னார் மருத்துவமனைக்கு பரவியுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை அந்த வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பதிகாரி வெளிக்கொண்டு வந்த பின்னர் அது நாடளாவிய ரீதியில் பேசுபொருளாக மாறியது.
ஆனால் அந்த வைத்தியர் மாற்றப்பட்ட பின்னரும் நீலகண்டன் கடித்த ஒருவரை வைத்தியசாலைக்கு இரவு வேளை கொண்டு வந்த போது வெளிநோயாளர் பிரிவில் எந்தவொரு வைத்தியரும் இல்லை எனவும் ஏன் பாதுகாப்பு உத்தியோகத்தர் கூட இல்லையெனவும் குடும்பத்தவர்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலையில் நடத்திய கூட்டத்தில் குற்றம் சாட்டினர்.
வழமைபோலவே விசாரணை நடக்கிறது.உரியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் சிசிரிவி காட்சிகளை பார்க்கிறோம் என பதில் அளிக்கப்பட்டது.
மன்னார் வைத்தியசாலை
இப்போது அதேபோன்றதொரு பிரச்சினை மன்னார் வைத்தியசாலையிலும் அரங்கேறியுள்ளது. குழந்தை பிறந்து வீடு சென்ற இளம் பட்டதாரி குடும்பபெண் அதிகளவு குருதிப்பெருக்கால் இரவுவேளை வைத்தியசாலையில் அனுமதித்தும் வைத்தியர்கள் எவரும் அவரை பார்வையிடவில்லை என குடும்பத்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவரது இறப்பிற்கு வைத்தியர்களே காரணமெனவும் அவர்கள் கூறுகின்றனர்.இதற்கும் வழமை போன்று விசாரணை நடக்கிறது உரியவர்களை அடையாளம் கண்டுவிட்டோம் தண்டனை உறுதி என தெரிவிக்கப்பட்டது.
அப்படியென்றால் அடிப்படை பிழை எந்கே நடக்கிறது. ஒரு சம்பவம் நடந்தால் அதற்கு பின்னர் அந்தப்பிழை நடக்ககூடாது அல்லவா? மீண்டும் மீண்டும் அதே பிழை ஏன் விடப்படுகிறது?
இது யாரின் அசண்டையீனம் என்னதான் நடக்கிறது வடக்கு மருத்துவமனைகளில்...