சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல விரும்பும் நாடுகள்! முதலிடம் இடம்பிடித்துள்ள நாடு
கூகுள் தேடலை அடிப்படையாக வைத்து உலகில் மக்கள் அதிகம் செல்வதற்கு விரும்பக்கூடிய நாடுகள் பட்டியலிப்பட்டுள்ளது.
சிறந்த கல்வி, இயற்கை அழகு, உயர் வாழ்க்கைத் தரம் மற்றும் கலாச்சாரம் போன்ற பல காரணங்கள் இந்த இடங்கள் விரும்பப்படுவதற்கான காரணங்களாக இருக்கலாம்.
கனடா (Canada)
அந்தவகையில் மக்கள் அதிகம் செல்வதற்கு விரும்பக்கூடிய நாடுகளில் முதலிடத்தில் கனடா உள்ளது.
குறிப்பாக மாணவர்கள் இடம்பெயர்வதற்கு மிகவும் பிரபலமான இடமாக பார்க்கப்படுகின்றது. அங்கு குறைவான கல்வி கட்டணத்தில் உயர்தர கல்வி வழங்கப்படுவதோடு அவர்களின் கல்வி நிறுவனங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கனடா இடம்பெயர்வதற்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக உள்ளது. கூகுளில் 1.52 மில்லியன் தேடல்களை கொண்டு கனடா பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அவுஸ்திரேலியா (Australia)
இந்த பட்டியலில் அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
சிறந்த கல்வி, நல்ல வாழ்க்கைத் தரம் மற்றும் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுவதால் மக்கள் அதிகம் விரும்பத்தக்க இடமாக உள்ளது.
கூகுளில் 1.36 மில்லியன் தேடல்களை கொண்டு அவுஸ்திரேலியபட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
நியூசிலாந்து (Newzeland)
நியூசிலாந்து இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
நியூசிலாந்து அதன் வியாபாரம், நிதியுதவியுடன் கூடிய நல்ல மருத்துவ முறை, பாதுகாப்பு மற்றும் உயர்தர வாழ்க்கை ஆகியவற்றிற்கு பெயர் பெற்றதால், மக்கள் இடம்பெயர்வதற்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக உள்ளது.
1.16 மில்லியன் தேடல்களை கொண்டு நியூசிலாந்து பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஸ்பெயின் (Spain)
ஸ்பெயின் இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
அதன் வளமான கலாச்சாரம் மற்றும் அழகான கடற்கரைகள் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றதால், மக்கள் அதிக அளவில் இடம்பெயர்வதற்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக உள்ளது.
1.15 மில்லியன் தேடல்களை கொண்டு ஸ்பெயின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரித்தானியா (UK)
பிரித்தானியா இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
வலுவான பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி மற்றும் சுகாதாரம் மற்றும் பாரம்பரியம் போன்ற காரணங்களால் விரும்பத்தக்க இடமாக உள்ளது.
கூகுளில் 1.11 மில்லியன் தேடல்களை கொண்டுள்ளது.
போர்த்துகல் (Portugal)
போர்த்துகல் இந்த பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.
அதன் காலநிலை, கடற்கரைகள் மற்றும் மலிவு வாழ்க்கை போன்றவற்றினாலும், உயர்தர வாழ்க்கையை வழங்குவதாலும், இடம்பெயர்வதற்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக உள்ளது.
கூகுள் 843,000 தேடல்களை கொண்டு போர்த்துகல் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஜப்பான் (Japan)
ஜப்பான் வளமான கலாச்சாரம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.
உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும், தனித்துவமான கலாச்சார அனுபவத்தையும் வழங்குவதால் ஜப்பான் இடம்பெயர்வதற்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக உள்ளது.
804,000 தேடல்களை கொண்டு ஜப்பான் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஜெர்மனி (Germany)
ஜெர்மனி இந்த பட்டியலில் எட்டாம் இடத்தை பிடித்துள்ளது.
அதன் இயற்கைக்காட்சிகள், சிறந்த வாழ்க்கை முறை, வேலை, வாழ்க்கை சமநிலை, வலுவான பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, மற்றும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படுவதோடு பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் கட்டணம் இல்லாமல் இலவசக் கல்வி வழங்குகின்றன.
எனவே இது சர்வதேச மாணவர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. கூகுளில் 761,000 தேடல்களை கொண்டு ஜெர்மனி பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரான்ஸ் (France)
பிரான்ஸ் இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.
அதன் வளமான கலாச்சாரம், நேர்த்தியான உணவு வகைகள், அழகான நிலப்பரப்பு, உயர்தர வாழ்க்கைத் தரம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்காக மக்கள் இடம்பெயர்வதற்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக உள்ளது.
கூகுள் 757,000 தேடல்களை கொண்டு பிரான்ஸ் பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்து(Switzerland)
சுவிட்சர்லாந்து சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் கல்வியைக் கொண்ட ஐரோப்பாவின் சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இயற்கைக்காட்சி, உயர்ந்த வாழ்க்கைத் தரம், திறமையான தொழிலாளர்கள், குறைந்த வேலையின்மை விகிதங்கள் மற்றும் வலுவான பொருளாதாரம் ஆகியவற்றிற்காக சுவிட்சர்லாந்து இடம்பெயர்வதற்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக உள்ளது.
கூகுளில் 703,000 தேடல்களை கொண்டு சுவிட்சர்லாந்து பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |