உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனம் எது தெரியுமா..!
கிராபிக்ஸ் (Graphics) உள்ளிட்ட தத்ரூபமான காட்சிகளை செயல்படுத்தும் கருவிகளை உருவாக்கும் நிறுவனமான என்விடியா( Nvidia) உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பங்கு பெறுமதி நேற்று (18) வரலாற்றில் அதிகூடிய பெறுமதியை பதிவு செய்திருந்தது.
அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு நேற்று 3.5% அதிகரித்து 136 டொலர்களாக (USD) காட்டப்பட்டது.
கணினி சிப்
இந்த மாத தொடக்கத்தில், என்விடியா ஆப்பிளின் (apple) மதிப்பை விஞ்சியது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் கருவிகளுக்குத் தேவையான கணினி சிப்களை என்விடியா தயாரிக்கிறது.
அதன் தயாரிப்புகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதாக சந்தை அறிக்கைகள் காட்டுகின்றன.
இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு $3.34 டிரில்லியன் என்று கூறப்படுகிறது. என்விடியா ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |