உங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் என்ன பிரச்சினை? மனம் திறந்தார் விமல்
Colombo
Mahinda
Wimal Weerawansa
By Vasanth
பிரதமர் எனக்கு கூறியதை நான் ஊடகங்களுக்கு கூற முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
“Made in Sri Lanka” திட்டத்தின் கீழ் முதல் வர்த்தக கண்காட்சியை அமைச்சர் விமல் வீரவன்சவின் அழைப்பின் பேரில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று காலை திறந்து வைத்தார். இதன்போது பிரதமருக்கும் விமலுக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் நடந்தது.
இது குறித்து ஊடகவியலாளர்கள் விசாரித்த போது,
“பிரதமருக்கும் எனக்கும் இடையில் என்ன பிரச்சினை உள்ளது? யார் அப்படி சொன்னது? பிரதமர் என்னிடம் கூறியதை நான் ஊடகங்களுக்கு கூறுவது சரியானதா? என கேள்வி குறிப்பிட்டார்.
நான் சிறு பிள்ளை தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன்” என்றார்.