உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட தகவல்
education
student
exam
g.l.peris
By Jaso
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரம் மற்றும் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்தப்படும் தினம் பற்றிய இறுதித் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடத்தும் திகதி பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெறுவதாக அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சையும் அதற்கு அடுத்தநாள் உயர்தர பரீட்சையும் ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டபோதிலும் அந்த திகதியில் பின்னர் மாற்றம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி