விடுதலைப் புலிகளின் டொலர் எங்கே! வவுனியாவில் போராட்டம்
Vavuniya
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
LTTE Leader
By Kiruththikan
விடுதலைப் புலிகளின் டொலர் எங்கே எனத் தெரிவித்து வவுனியாவில் இராணுவ முகாம் அருகே சிங்கள மக்கள் போராட்டம் ஒன்றினை நேற்று (06) முன்னெடுத்திருந்தனர்.
மூன்று முறிப்பு பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களின் ஏற்பாட்டில் ஏ9 வீதியின் ஒரு வழிப்பாதையினை மறித்து குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது.
இதன் போது “விடுதலைப்புலிகளின் டொலர் எங்கே”, “எங்கள் பணத்தை எங்களிற்கு தாருங்கள்”,“நாங்கள் கேட்பது சாப்பிடுவதற்கு ஆனால் கிடைப்பது உங்களுக்கு”, “கோ ஹோம் கோட்டா”போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படை தலைமையகத்தின் அருகிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்