அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன்தொகை எங்கே?? எதிரணி கேள்வி
தற்போதைய அரசாங்கம் இந்த ஆண்டில் மாத்திரம் 2.3 டிரில்லியன் கடன் பெற்றுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப்பேச்சாளருமான எஸ்.எம்.மரிக்கார் (S.M.Marikkar) தெரிவித்துள்ளார்.
குறித்த பணத்தொகையை அரசாங்கம் எதற்கு பயன்படுத்தியது என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்நிலையில் அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2.3 டிரில்லியன் கடன்களைப் பெற்றுள்ளது.
இருப்பினும் தாமரை கோபுரம், துறைமுகங்கள், மைதானங்கள் மற்றும் விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் குடும்பத்தினர் பயணம் செய்வதற்கும் அப்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் (Mahinda Rajapaksa) அதிக தொகை கடனாகப் பெறப்பட்டது.
குறித்த கடன் தொகையானது கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை தீர்ப்பதற்கே பெறப்பட்டது என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்திருந்தார்.
நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.