அரசாங்கம் விட்ட தவறு! இன்று மக்கள் அவதிப்படுகின்றனர் - தவறைச் சுட்டிக்காட்டினார் ரணில்
கொரோனா பரவல் மாத்திரமின்றி அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையே நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்ட கலந்துரையாடலொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு முன்பிருந்தே, இந்த அரசாங்கத்தின் கீழ் வருமானம் குறைவடைந்திருந்தது.
நாட்டின் பிரபல வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைய, வருமான சேர் வரியை குறைத்தமையின் ஊடாக, அரசாங்கத்தின் வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்தது.
நல்லாட்சி நிலவிய காலப் பகுதியில் கடனை செலுத்தும் தொகையை தவிர, நாட்டின் ஏனைய செலவீனங்களுக்கான வருமானம் உள்நாட்டிலேயே உழைக்கக்கூடியதாக இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.