உலகில் அதிக பணக்காரர்களை கொண்ட டாப் 10 நாடுகள் : எவை தெரியுமா !
Money
World
By Shalini Balachandran
உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் உலகளாவிய பொருளாதாரங்கள் மற்றும் தொழில்களை வடிவமைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட 2024 ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியல் பல எதிர்பாராத மாற்றங்களுடன் வந்துள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்கா (United States) மற்றும் சீனா (China) தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் இந்த பதிவில் அதிக பில்லினியர்கள் இருக்கும் உலகின் முதல் பத்து நாடுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
1. அமெரிக்கா (United States)
- எப்போதும் போல இந்த பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது, கடந்த ஆண்டு 735 பில்லியனர்களுடன் இருந்த அமெரிக்கா தற்போது 813 பில்லியனர்களைக் கொண்டுள்ளது.
- அவர்களின் மொத்த நிகர மதிப்பு $5.7 டிரில்லியன் ஆகும்.
- அமெரிக்காவின் மிகப்பெரிய பணக்காரராக எலோன் மஸ்க் உள்ளார்.
- அவரது நிகர மதிப்பு $195 பில்லியன் ஆகும்.
2. சீனா (China)
- 406 பில்லியனர்களுடன் இந்த பட்டியலில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
- இது கடந்த ஆண்டு 495 ஆக இருந்தது. இந்த செல்வந்தர்களின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு 1.3 டிரில்லியன் டாலராக உள்ளது.
- கடந்த ஆண்டு இது 1.67 டிரில்லியன் டாலரிலிருந்து குறைந்தது.
- சீனாவின் மிகப் பெரிய பணக்காரராக ஜாங் ஷான்ஷான் உள்ளார்.
- அவரது சொத்து மதிப்பு 62.3 பில்லியன் டாலராக உள்ளது.
3. இந்தியா (India)
- கடந்த ஆண்டு 169 பில்லியனர்களை கொண்டிருந்த இந்தியா, 200 பில்லியனர்களுடன் இந்த வருடம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- இந்திய பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு 954 பில்லியன் டொலர்கள் ஆகும்.
- 116 பில்லியன் டொலர் நிகர சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார்.
4. ஜேர்மனி (Germany)
- கடந்த ஆண்டு 126 பில்லினியர்கள் இருந்த ஜெர்மனி, 132 பில்லியனர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
- ஜேர்மன் பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு 644 பில்லியன் டொலர்கள்.
- இது கடந்த ஆண்டில் 585 பில்லியன் டொலர்களாக இருந்தது.
- கிளாஸ்-மைக்கேல் குஹ்னே ஜெர்மனியின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார்.
- அவரது சொத்து மதிப்பு 39.2 பில்லியன் டொலர்களாகும்.
5. ரஷ்யா (Russia)
- ரஷ்யா 120 பில்லியனர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
- இது கடந்த ஆண்டு 105 ஆக இருந்தது, அவர்களின் மொத்த நிகர மதிப்பு 537 பில்லியன் டொலர்களாக இருந்தது.
- இது கடந்த ஆண்டு 474 பில்லியன் டாலராக இருந்தது.
- 28.6 பில்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள வாகிட் அலெக்பெரோவ், ரஷ்யாவின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார்.
6. இத்தாலி (Italy)
- இத்தாலியில் பில்லியனர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 64 ஆக இருந்தது.
- தற்போது இது 73 ஆக அதிகரித்துள்ளது.
- அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 302 பில்லியன் டொலர்களாகும்.
- இத்தாலியின் நம்பர் ஒன் பணக்காரர் ஜியோவானி ஃபெரெரோ ஆவார்.
- அவரது நிகர மதிப்பு 43.8 பில்லியன் டொலர்களாகும்.
7. பிரேசில் (Brazil)
- பிரேசிலில் 69 பில்லியனர்கள் உள்ளனர்.
- இது கடந்த ஆண்டு 51 ஆக இருந்தது.
- அவர்களின் மொத்த நிகர மதிப்பு 231 பில்லியன் டொலர்களாகும்.
- இது கடந்த ஆண்டு 160 பில்லியன் டொலர்களாக இருந்தது.
- பிரேசிலில் உள்ள மிகப்பெரிய பணக்காரர் எட்வர்டோ சவெரின் ஆவார்.
- அவரது மொத்த சொத்து மதிப்பு 28 பில்லியன் டொலர்களாகும்.
8. கனடா (Canada)
- கனடாவில் 67 பில்லியனர்கள் உள்ளனர்.
- இது கடந்த ஆண்டு 63 ஆக இருந்தது, அவர்களின் மொத்த சொத்து மதிப்பு $315 பில்லியன் ஆகும்.
- இது கடந்த ஆண்டு $245 பில்லியனாக இருந்தது.
- டேவிட் தாம்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் கனடாவில் 67.8 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளனர்.
9. ஹாங்காங் (Hong Kong)
- ஹாங்காங்கில் 67 பில்லியனர்கள் உள்ளனர்.
- இது கடந்த ஆண்டு 66 ஆக இருந்தது.
- அவர்களின் மொத்த நிகர மதிப்பு 330 பில்லியன் டாலராகும்.
- லி கா-ஷிங் 37.3 பில்லியன் டொலர் நிகர மதிப்புடன் ஹாங்காங்கின் முதல் பணக்காரர் ஆவார்.
10. இங்கிலாந்து (England)
- இங்கிலாந்தில் 55 பில்லியனர்கள் உள்ளனர்.
- இது கடந்த ஆண்டு 52 ஆக இருந்தது, அவர்களின் மொத்த நிகர மதிப்பு 225 பில்லியன் டாலராக உள்ளது.
- 18 பில்லியன் டொலர் நிகர சொத்து மதிப்பைக் கொண்ட மைக்கேல் பிளாட், இங்கிலாந்தின் முதல் பணக்காரராக இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்