செப்டம்பர் 13ஆம் திகதி நாட்டைத் திறப்பது தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு
Corona
Curfew
SriLanka
Hemantha Herath
By Chanakyan
எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டை திறப்பதாயின், திட்டங்களை முன் கூட்டியே உருவாக்கி, அதனை பகிரங்கப்படுத்துவது பொருத்தமானது என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
13ஆம் திகதி தொடக்கம் திறப்பதாயின் அன்றைய தினம் சமூக, பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய முறை குறித்து, அந்தந்த பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் திட்டமிட்டு அதனை பகிரங்கப்படுத்த வேண்டும்.
அவ்வாறு பகிரங்கப்படுத்தினால் நாட்டைத் திறப்பதற்கு தகுந்த சூழ்நிலை உள்ளதாக திருப்தியடையலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.