பலரும் அறிந்திடாத அதிர்ஷ்ட செடி - வீட்டில் எந்த திசையில் வைக்கலாம்?
அழகு, ஆரோக்கியம் என்பவற்றை எல்லாம் தாண்டி வாஸ்து சாஸ்திரத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற ஒன்றாக கற்றாழை விளங்குகின்றது என்பது எங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.
கற்றாழைச் செடியினை வீட்டில் வளர்ப்பதால் செல்வச் செழிப்புக்கு குறைவிருக்காது என்பது ஐதீகம், இதனால் பலர் தங்கள் வீடுகளில் கற்றாழையை வளர்க்கிறார்கள்.
வாஸ்துப் படி, ஜேட் செடியைப் போலவே ஒரு அதிர்ஷ்ட செடியாக கற்றாழை விளங்குகிறது.
அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்
கற்றாழையின் பயன்பாடு முகத்திற்கு பளபளப்பைத் தருவது மட்டுமல்லாமல், வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்றாழை செடியை வீட்டில் நட்டால், அது அந்த நபரின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும் என சொல்லப்படுகிறது.
கற்றாழை செடியை தவறான திசையில் வைத்தால் வீட்டில் கஷ்டம் வரும் என சொல்லப்படுகிறது. அவ்வாறு எந்த திசையில் வைத்தால் என்ன பலன் என நாம் இங்கு பார்ப்போம்.
அதிக அளவில் பராமரிப்பும் தேவையில்லாத ஒரு தாவரம் என்பதால் எளிதில் வளர்க்க முடியும். வீட்டின் முன் முகப்பில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைய முடியாது.
கற்றாழைச் செடி எளிதாக வளரும் ஒன்றை நட்டால் பல வளரும். அதனால் தான் சாடியில் ஒரே ஒரு செடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சச்சரவு ஏற்படும் அபாயம்
கற்றாழை செடியை வீட்டின் கிழக்கு திசையில் நடக்கூடாது. கிழக்கு திசையில் இருந்து நேர்மறை ஆற்றல் நுழைவதால், உங்கள் வீட்டின் கிழக்கு திசையில் கற்றாழை செடியை நட்டால், எதிர்மறை ஆற்றல் பரவ ஆரம்பித்து, வீட்டில் சச்சரவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
பொதுவாக காலையில் எழுந்தவுடன் நல்ல விஷயங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் கற்றாழை செடியை பார்ப்பது நல்லதல்ல. உங்கள் படுக்கையறையில் கற்றாழை செடியை நட்டால், காலையில் இந்த செடியைப் பார்ப்பது உங்கள் வழக்கத்தைக் கெடுத்துவிடும்.
படுக்கையறையில் ஒரு முள் செடி இருப்பது குடும்ப வாழ்க்கையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் குடும்பத்தின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதனால் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)