2025 ஆரம்பத்திலேயே அதிஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !
Astrology
By Shalini Balachandran
இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு ஆண்டில் வேறுபட்டிருக்கும்.
இதில் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது பணவரவு குறித்துதான் ஏனெனில் பணம் சிறத்தால் தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்தநிலையில், வருகின்ற 2025 ஆம் ஆண்டில் பணவரவுடன் சிறப்பாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கப் போகின்ற அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்
- ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு 2025 ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் விருப்பங்கள் நிறைவேறும்.
- உங்கள் வாழ்க்கையில் அனைத்து துறையிலும் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம்.
- சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
- பெற்றோர் மற்றும் பெரியவர்களுடன் நெருக்கம் உண்டாகும்.
- உங்களின் பேச்சு மற்றும் செயலில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம்.
- உங்களின் உறவுகள் மேம்படும்.
- வெளியூர், வெளிநாடு தொடர்பான தொழில் செய்யக்கூடியவர்களுக்கு எதிர்பாராத சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- வேலையில் கூடுதல் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
- விளையாட்டு போட்டி, தேர்வுக்கு தயாராக கூடியவர்களுக்கு சிறப்பான வெற்றி உண்டாகும்.
- ஆரோக்கியம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கடகம்
- கடக ராசி சேர்ந்தவர்களுக்கு 2025 ஜனவரி மாதத்தில் உங்களின் நேரத்தையும், ஆற்றலையும் சரியாக பயன்படுத்தினால் எல்லாவிதத்திலும் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.
- முதலீடு செய்யும் முன் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நன்று.
- வெளிநாடு, வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- உங்கள் செயலுக்கு குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவைப் பெறலாம்.
- பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
- உங்கள் காதலை வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.
- வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக பயணம் செல்ல வாய்ப்புள்ளது.
கன்னி
- கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு 2025 ஜனவரி மாதத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
- உங்களின் பெரிய பொறுப்புகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள்.
- பணியிடத்தில் உங்களுக்கு புதிய பதவி அல்லது பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
- உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
- நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக முன்னேற்றத்தை காண்பீர்கள்.
- மாதத்தின் இரண்டாம் பகுதியில் காதல், திருமண உறவில் சில மன கவலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
- வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது.
- உங்கள் வசதி மற்றும் ஆடம்பரமான மனப்பான்மை காரணமாக செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
துலாம்
- துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு ஜனவரி மாதத்தில் வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வகையில் நல்ல வாய்ப்புகள் அமையும்.
- போட்டித் தேர்வு, விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- நிதி சார்ந்த நன்மைகள் கிடைக்கும்.
- இந்த மாதத்தில் முதலீடு செய்யும் விஷயத்தில் கவனம் தேவை.
- குறுகிய கால லாபத்திற்கு ஆசைப்பட்டு எதிலும் பணம் முதலீடு செய்ய வேண்டாம்.
- காதல் வாழ்க்கை தொடர்பாக சாதகமான சூழலில் நிலவும்.
- பெண்கள் பணியிடத்திலும், குடும்பத்திலும் சமநிலையைப் பராமரிப்பது கடினமாக இருக்கும்.
மீனம்
- மீன ராசி தெரிந்தவர்களுக்கு ஜனவரி மாதத்தில் மங்களகரமானதாகவும், வெற்றிகள் குவியக்கூடியதாக இருக்கும்.
- மாத தொடக்கத்தில் உங்களை நேசிப்பவர்கள் அல்லது செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
- வீடு, மனை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.
- உங்களின் வருமான ஆதாரங்கள் உயரும்.
- நீதிமன்ற வழக்கு விஷயத்தில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
- பண முதலீடு செய்யும் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது சிறப்பான பலனை தரும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்