யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளைநுரை கரையொதுங்கியதால் பரபரப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை நுரை ஒதுங்கியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
மண்சரிவு அபாயத்தால் ஆபத்தில் மலையக மக்கள்
இலங்கையில் டித்வா புயலின் தாக்கத்தால் நாடு இன்னமும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.தமது சொந்த நிலங்களை விட்டு இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் வானிலை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பாக மலையக மக்கள் மண்சரிவு அபாயத்தால் தற்போதும் பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் தமது சொந்த இடத்தில் குடியேற்றப்படமாட்டார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண கடற்கரையில் திடீரென வெள்ளை நுரை
இவ்வாறு அனர்த்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கையில் யாழ்ப்பாண கடற்கரையில் திடீரென வெள்ளை நுரை கரை ஒதுங்கியது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




