50 மீற்றரில் ஆயுததாரி! ட்ரம்ப்பின் மரண திகில் வினாடிகள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் குறிவைத்து தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நேற்றிரவு வோசிங்டனை திகிலூட்டிய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கைதான கோல்தோமஸ் அலன், தன்னை விசாரணை செய்த எப்.பி.ஐ அதிகாரிகளிடம் செய்தி சொன்னதாக உலக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் உள்ளூரில் தமிழர்களின் யாழ்ப்பாணத்தில் மக்கள் பிரதிநிதியாக விளிக்கப்படும் ஒரு எம்.பி பெண்களுக்கு தனது கையில் துப்பாக்கியை வைத்திருந்தபடி துரட்சி காட்சிகளும் வெளியாகின.
நேற்றிரவு வோசிங்டனில் இடம்பெற்ற திகில் சம்பவம் குறித்து கருத்து தெரவித்த ட்ரம்ப், தன்னையும் தனது நிர்வாகத்தில் உள்ளவர்களையும் நோக்கி சூடு நடத்தியவர் மனநோயாளியாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கிறார். அங்கு 31 வயதான கோல் தோமஸ் அலனுக்கு மனநோய் இருந்ததோ இல்லையோ தெரியாது.
ஆனால் நிராயுத பாணிகளாக நிற்கும் பெண்களை துப்பாக்கி காட்டி மிரட்டி தம்மை அரசியல்வாதிகள் என சொல்பவர்களும், தம்மை முற்றும் துறந்த துறவிகள் என அடையாளப்படுத்தி போதைப்பொருளை கடத்தி விமான நிலையத்தில் பிடிபட்ட சிங்கள பௌத்த பிக்குகளும் உள்ளூரில் இன்று பேசுபொருளாகியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்