யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது யார்.... சிங்கள மாணவர்களின் புரிதல்
யாழ்ப்பாண நூலகத்தை (Jaffna Public Library) எரித்தவர்கள் விடுதலைப்புலிகளே என்று சகோதர மொழி பேசுபவர்களுக்கு சொல்லப்பட்டிருப்பதாக சுற்றுலா வழிகாட்டி நடேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நூலகம் எப்போது எரியூட்டப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும், யாரால் எரியூட்டப்பட்டது என்பதும் தெரியும், ஆனால் யாழ்ப்பாண நூலகம் அவர்களால் எரியூட்டப்பட்டது என சகோதர மொழி பேசுபவர்களுக்கு தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
வரலாற்றில் எந்த இடத்தில் மதத்தை கொண்டு திணிப்பதற்கு முற்படுகின்றோமோ அந்த இடத்தில் பிரச்சினை வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை கையாள்வது என்பது கடினமான விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |