சிறையில் ரிஷாத் பதியுதீனுக்கு தொலைபேசியை வழங்கியவர் யார்?
prison
rishard bathiudeen
mobilie phone
By Jaso
மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்கத் தொலைபேசியை வழங்கியவர் யார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி குறித்த சிறைச்சாலையில் பணியாற்றும் சிறை அதிகாரியே இந்த கைபேசியை வழங்கியவர் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிகாரி கொழும்பு – மகஸின் சிறைச்சாலையிலிருந்து வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிறைக் கூடத்திலிருந்து நேற்றைய தினம் கையடக்கத் தொலைபேசியொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.