நாட்டை கட்டி எழுப்பும் மூளை யாரிடம்? வெளியான தகவல்
நாட்டில் கடுமையான தொற்றுநோய் பரவியுள்ள போதிலும், சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அரசாங்கம் 6 பில்லியனால் குறைத்துள்ளது. மக்களின் சுகாதாரம் மற்றும் பசியின்மை தொடர்பில் அக்கறை கொள்ளாத அரசாங்கம் ஏன் இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardena) கேள்வி எழுப்பியுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இது மக்களை தவறாக வழிநடத்தும் வரவு செலவுத் திட்டம் எனவும், நாட்டு மக்களுக்கு அரிசி, சீனி உட்பட உண்பதற்கு எதுவுமில்லை எனவும், இவ்வாறான நாட்டில் அரசாங்கம் பொய்யான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்பதை இளைஞர்கள் உணர்ந்து நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டை கட்டியெழுப்பும் மூளை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் மாத்திரமே உள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.