ஜனாதிபதி தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளர் நாமல்: மொட்டு கட்சி எம்பி திட்டவட்டம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளர் நாமல் ராஜபக்சவே (Namal Rajapaksa) என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக (D. V. Chanaka) தெரிவித்துள்ளார்.
தமது கட்சியில் இருந்து விலகிய ஏனைய உறுப்பினர்களும் எதிர்காலத்தில் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கும் (Mahinda Rajapaksa) நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் இளைஞர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன
இங்கு மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க, “இன்றும் பொதுஜன பெரமுனவின் வாக்குகள் மகிந்த ராஜபக்சவைச் சுற்றியே இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம்.
இப்போதும் எமது ஆசன அமைப்பாளர்களில் 90 வீதமானவர்கள் எம்முடன் உள்ளனர். 10 வீதமானவர்களே ஜனாதிபதியுடன் இணைந்தனர்.
அவர்களும் தற்போது ஆசன அமைப்பாளர்களைப் பெற வரிசையில் வந்துள்ளனர்.
எமது நண்பர்களுக்ம் எங்களுடன் இணையுமாறு அழைக்கிறோம். தெற்கில் பலம் வாய்ந்த வேட்பாளர் எங்களிடமே உள்ளார்" என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |