கேகேஆர் அணியின் புதிய பயிற்சியாளர் பற்றி வெளியாகியுள்ள தகவல்
கேகேஆர்(KKR) அணியின் பயிற்சியாளராக இருந்த கௌதம் கம்பீர் இந்திய(India) அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் அணித்தலைவராக இருந்த கௌதம் கம்பீர் (Gautam Gambhir) 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றவர்.
அதன்பின் மீண்டும் கடந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் ஆலோசகராக இருந்து, 3வது கோப்பையையும் வென்று கொடுத்தார்.
புதிய பயிற்சியாளர்
இந்நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்(Rahul Dravid) பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக கேகேஆர் அணியின் ஆலோசகர் பதவி வெற்றிடம் காணப்படுகின்றது.இதனால் அந்த பதவிக்கு கேகேஆர் அணி நிர்வாகம் யாரை கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், கேகேஆர் அணியின் முன்னாள் வீரர் காலீஸ், அந்த அணியின் ஆலோசகராக வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேகேஆர் அணி
இவர், ஏற்கனவே 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கேகேஆர் அணி சாம்பியன் பட்டம் வென்ற போது வீரராக விளையாடியவர் , இதனை தொடர்ந்து ஓய்வுப்பெற்ற அவரை, 2015ஆம் ஆண்டே கேகேஆர் அணி நிர்வாகம் ஆலோசகராக கொண்டு வந்தது.
2019ஆம் ஆண்டு வரை காலீஸ் பணியாற்றிய அவர், தென்னாப்பிரிக்கா அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக பொறுப்பேற்றார்.
இதன்பின் கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மெக்கலத்திற்கு பின் சந்திரகாண்ட் பண்டிட் பொறுப்பேற்றார்.
அவர் இந்திய வீரர்களை சிறப்பாக கையாண்டாலும், வெளிநாட்டு வீரர்களை கையாண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையிலேயே, கேகேஆர் அணி மீண்டும் கௌதம் கம்பீரை ஆலோசகராக கொண்டு வந்தது.
எனவே, தற்போது காலீஸை பயிற்சியாளராக கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |