‘மொட்டு’வின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்? வெளியானது அறிவிப்பு
podujana peramuna
basil rajapaksha
presidental candidate
By Sumithiran
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் நாளையதினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளவருமான பஸில் ராஜபக்சவே அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையதினம் பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படும் ஜயந்த கெட்டகொட இதனைத் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜயந்த கெட்டகொட இவ்வாறு கூறினார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன்னர் வர்த்தமானியில் பெயர் அறிவிக்கப்பட்ட பின் பசில் ராஜபக்ஷ அமைச்சராக பதவியேற்பார் என அவர் கூறினார்.
பசில் ராஜபக்ஷ மூலம் நாட்டு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி