கருணா தப்பிச் செல்ல யார் காரணம்? ரணில் தெரிவித்தது என்ன? காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா தப்பிச் சென்றமைக்கு பொறுப்பேற்று என்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது
7 வருடங்களுக்கு முன்னர் எனது கட்சித் தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார் எனக்கு துரோகமிழைத்தார் இதனை காப்பாற்றிக்கொள்வதற்காக என்னை பலிக்கடாவாக்கினார். அதன் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
நான் வெறுமனே அவரது உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றினேன்.
நாட்டிற்கு நல்லது என நினைத்ததை மாத்திரம் செய்தேன். அந்த நாள் ஜூன் 22 2004 நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து 17 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் அவரது பெயர் ரணில் விக்கிரமசிங்க எனக்கு துரோகமிழைத்த கட்சித் தலைவர் தொடர்ந்தும் நாட்டுக்கு துரோகமிழைக்கின்றார்.
கருணா தப்பிச்செல்வதற்கு நானே காரணம் என பிரபாகரன் அறிந்ததை தொடர்ந்து சீற்றமடைந்த அவர் தனது அரசியல் பிரிவினை செய்தியாளர் மாநாட்டினை நடத்துமாறும் எனக்கு அதில் தொடர்பிருப்பதை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஜூன் 20 ம் திகதி அது நடந்தது.
மறுநாள் எனது கட்சித் தலைவரிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தன. தனது அலுவலகத்திற்கு என்னை வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மங்களசமரவீரவும் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களும் செய்தியாளர் மாநாட்டினை நடத்தி தங்கள் குறுகிய அரசியலை முன்னெடுத்தவண்ணமிருந்தனர். எனது நடவடிக்கைக்கு எனது கட்சியே காரணம் என தெரிவித்து சமாதானபேச்சுக்களை குழப்ப நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சித் தலைவர் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டார்.நான் மிகவும் அமைதியாக உங்கள் உத்தரவின் பேரிலேயே செயற்பட்டேன் என தெரிவித்தேன். நாங்கள் தற்போது அரசாங்கத்தில் இல்லை நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம்- சமாதான பேச்சுவார்த்தைகள் முக்கியமில்லை என அவர் தெரிவித்தார்.
நான் அதிர்ச்சியடைந்து இவ்வாறு பதிலளித்தேன் – சேர் நீங்கள் கொழும்பில் இருந்தவாறு இதனை தெரிவிக்கலாம்.நான் மக்கள் யுத்த பயத்தில் வாழும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றேன் நீங்கள் தான் இது நல்ல நடவடிக்கை என தெரிவித்தீர்கள் என்றேன் .
நான் தற்போது கட்சியை பற்றி சிந்திக்கவேண்டும்.நான் மிகவும் அவமானகரமான சூழலில் இருக்கின்றேன். நீங்கள் பதவி விலகவேண்டும் என அவர் தெரிவித்தார். நான அந்த சந்திப்பிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினேன்.
எனக்கு இராணுவபுலனாய்வு பிரிவினரிடமிருந்து தகவல்கள் கிடைத்தன. எனது பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகியுள்ளது என அவர்கள் தெரிவித்தனர். என்னை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர் என பதிவிட்டுள்ளார்.
That day was June 22nd 2004.
— Ali Zahir Moulana (@alizmoulana) June 18, 2021
Ironically, 17 years later to the day since I resigned my seat in Parliament, a defeated MP will be sworn in to Parliament.
His name is Ranil Wickremesinghe.
The very Party Leader who betrayed me & continues to betray the country.
(31) pic.twitter.com/yzbks1Nu5K