தமிழ்தேசியத்திலிருந்து விலகும் உறவுகள்: கவலை வெளியிட்டுள்ள தவராசா
தமிழ்தேசியத்திலிருந்து எமது உறவுகள் விலகிப்போவதை அவதானிக்ககூடியதாக உள்ளது என சட்டத்தரணி கே. வி தவராசா (K.v. Thavarasha ) தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய அரசியல் நிலைகள் குறித்து ஊடகங்களுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழரசுக்கட்சி (ITAK) தேய்ந்து தேய்ந்து தற்போது எங்குள்ளது என்பதை மக்கள் அறிவார்கள்.
தெற்கில் ஏற்பட்ட மாற்றத்தை வடக்கிலும் கிழக்கிலும் கொண்டு வர வேண்டும். தமிழ்தேசியத்தை அடுத்த சந்ததியினருக்கு சரியான முறையில் நாம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை கட்சிகள் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கத்துடன் வந்தவர்களே.
தெரிந்தவர்கள் என்று வாக்களிக்காமல் யார் மக்களுக்காக சேவை செய்வார்கள், தமிழ்தேசியத்திற்காக பாடுபடுவார்கள் என பார்த்து தெரிவு செய்யுங்கள்.தொடர்ச்சியாக 15 வருடங்களாக ஏமாற்றப்பட்டுள்ளோம்.” என்றார்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |