கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மே மாதத்தில் கனடாவின் வேலைவாய்ப்பு நிலைமை மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 16 இலட்சமாக உயர்ந்ததுடன், வேலைவாய்ப்பு விகிதம் ஏழு வீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வேலை இல்லாதோர்
இந்த வேலை இல்லாதோர் விகிதமானது கொரோனா காலத்தை தவிர்த்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் பதிவான மிக அதிக வேலையற்றோர் எண்ணிக்கை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஏப்ரல் மாதத்தில் 6.9% இருந்த வேலை இல்லாதோர் விகிதம், மே மாதத்தில் ஏழு வீதமாக உயர்வடைந்துள்ளது.
கடுமையான சவால்
இதனடிப்படையில், கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக இந்த தொகை அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், நாட்டில் தற்போது வேலை தேடுவதில் மக்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றார்கள் என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்