அநுர ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை கையிலெடுத்த உதய கம்மன்பில
ஈஸ்டர் தாக்குதல் (Easter Attack) முடிந்து இவ்வளவு நாட்களுக்கு பிறகு அநுர ஆட்சிக்கு வந்ததும் உதய கம்மன்பில இந்த விவகாரத்தை கையிலெடுத்ததன் நோக்கம் என்ன என அரசியல் ஆய்வாளர் எம்.எம் நிலாம்டீன் கேள்வியெழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “கோட்டாபய ராஜாபக்சவை (Gotabaya Rajapaksa) ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்று முன் நின்றவர்களில் உதய கம்மனபிலவும் ஒருவர்.
அநுர ஆட்சிக்கு குடைச்சல் கொடுத்து பொதுத்தேர்தலில் அவர்களின் ஆதரவை குறைக்கும் நடவடிக்கையாகவே இது உள்ளது.” என்றார்.
13 தடவைகள் இந்தியா ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக உதய கம்மன்பிலவே (Udaya Gammanpila) கூறுகின்றார்.
இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டதன் பின்னணியில் இந்திய புலனாய்வுபிரிவு உள்ளதா? இந்திய ரோ அமைப்பு உள்ளதா?
இவ்வாறு தாக்குதல் நடைபெறபோகின்றது என்பதை இந்தியா (India) எவ்வாறு துல்லியமாக கணித்தது? போன்ற விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |