விபத்தில் கணவரை அடுத்து மனைவியும் உயிரிழந்த சோகம்
இரத்தினபுரி - பாணந்துறை வீதியில் கிரியெல்ல காவல் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிமாலி பண்டார (வயது 30) என்ற பெண் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ம் திகதி இரவு, உயிரிழந்தார்.இவர் அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
கடமையை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கணவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்ததாகவும், அதேநேரத்தில் கணவர் ஆசிரி விஜேசுந்தர (34) சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் கிரியெல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
கணவர் தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
விபத்திற்கான காரணம்

சொகுசு (டிஃபென்டர்) ஜீப் ஒன்று அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதுடன் மற்றுமொரு காரில் பயணித்த பெண் ஒருவரும் குழந்தையும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று (31) நடைபெறவிருந்த நிலையில், கணவரின் சடலம் கிரியெல்ல நெடுன் விஹாரை வீதியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின்

சொகுசு ஜீப் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது அதிவேகமாக அஜாக்கிரதையாகச் செலுத்தி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சொகுசு ஜீப்பை ஓட்டிச் சென்ற 24 வயதுடைய சாரதி, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் 6ஆம் விடுதியில் காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.