கற்பிட்டியில் கொடூரம்! கணவனால் எட்டு மாத கர்ப்பிணித் தாய் படுகொலை
Puttalam
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, கற்பிட்டி, தலவில பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஆர் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், 45 நிமிடங்களுக்குள் சந்தேக நபரைக் கண்டுபிடித்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் அவரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், உயிரிழந்தவர், தலவில, கெலே பள்ளிய பகுதியை சேர்ந்த 26 வயதான திலினி தில்ருக்ஷி என்ற கர்ப்பிணித் தாய் என தெரியவருகிறது.

அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி