தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் பேரழிவு : விஜேவீரவின் மகன் எச்சரிக்கை
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் அது அரசியல் ரீதியாக பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என தேவனா பரபுர (Devana Parapura) கட்சியின் பொதுச் செயலாளரும் ரோகண விஜேவீரவின் மகனுமான உவிந்து விஜேவீர( Uvindu Wijeweera) தெரிவித்துள்ளார்.
எனவே, தேசிய மக்கள் சக்தி 2/3 பெரும்பான்மையைப் பெறும் பட்சத்தில் அதன் விளைவுகளை வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் அவர் தெரிவித்தார்.
ஜே.ஆர். ஜயவர்தன பின்பற்றிய அரசியல் வியூகங்கள்
1977 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 5/6 நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றதை அடுத்து ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன பின்பற்றிய அரசியல் வியூகங்களைப் பற்றிக் குறிப்பிட்ட விஜேவீர, இதேபோன்றதொரு நிலைமையை நாடு தாங்காது என வலியுறுத்தினார்.
தூய்மையான நாடாளுமன்றத்திற்கு வழி வகுக்கும் ஊழல் அரசியல்வாதிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற தேசியமக்கள் சக்தியின் அறிவிப்பில் தனது கட்சி தவறு காணவில்லை என்று அவர் கூறினார். ஆனால், புதிய மற்றும் பழைய அரசியல் கட்சிகளில் இருந்து ஏராளமான புதியவர்கள் களத்தில் இருப்பதால், தேசிய மக்கள் சக்தியினரை மட்டுமே தேர்ந்தெடுக்க வாக்காளர்களை தள்ளுவது நியாயமாக இருக்காது, என்றார்.
"அனைத்து புதியவர்களுக்கும் சம வாய்ப்பு இருக்கவேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.தேசியமக்கள் சக்தியின் வாய்ச்சவடால் வாக்காளர்களை திசைதிருப்ப வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியா,சீனா , அமெரிக்கா மேலாதிக்க போர்
இந்தியாவும்(india) சீனாவும்(china) உள்ளடங்கிய அமெரிக்கா(us) தலைமையிலான குழுவிற்கு இடையே நடைபெற்று வரும் மேலாதிக்கப் போர், திவாலான இலங்கையை(sri lanka) மிகவும் கடினமான சூழ்நிலைக்கு தள்ளும் அதே வேளையில், நாடு இரக்கமின்றி வெளிநாட்டு சக்திகளால் சுரண்டப்படுவதாக உவிந்து விஜேவீர கூறினார்.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனர்கள் கையகப்படுத்தியதைக் குறிப்பிட்ட அவர், அபிவிருத்தியானது இலங்கையின் நிலைமையை மேலும் சீர்குலைத்துள்ளதாகவும், இன்று அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா(australia) மற்றும் ஜப்பானை(japan) உள்ளடக்கிய 'குவாட்' அதன் நிலையை உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
அண்மையில் நிறைவடைந்த ரஷ்யாவின்(russia) பிரிக்ஸ் மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொள்ளத் தவறியமைக்கு உவிந்து விஜேவீர வருத்தம் தெரிவித்துள்ளார். சக்திவாய்ந்த குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கைக்கு முடியாது என்பதால் ஜனாதிபதி அந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கக் கூடாது என மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |