கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அட்டகாசம்: விவசாயிகள் கவலை
Kilinochchi
Sri Lanka
Elephant
By Aadhithya
கிளிநொச்சி (Kilinochchi) மகிழங்காடு கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட பகுதிகளில் புகுந்த காட்டு யானைகள் விவசாயிகளின் பல ஏக்கர் வயல் நிலங்களை நாசம் செய்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் வயல்கள்
இந்த நிலையில், விதைத்து ஒன்றரை மாதங்களே ஆன பயிர்களையே யானைகள் அழித்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தொடர்ச்சியாக காட்டு யானைகளால் தமது நெல் வயல்கள் அழிவடைவதாகவும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமக்கு யானை வேலிகளை அமைத்து தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |



மரண அறிவித்தல்