கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ: மக்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை
கனடாவின் (Canada) ஆல்பர்ட்டா (Alberta) மாகாணத்தில் உள்ள தேசிய பூங்காவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (22) மாலை 06 மணியளவில் ஏற்பட்ட காட்டுத்தீ நேற்று (25) மாலை நகரத்திற்குள் பிரவேசித்துள்ளது.
இதனால் பல கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக பாரம்பரிய தளம்
குறித்த காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேற்ற அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
1984 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பிரகடனப்படுத்தப்பட்ட இந்த பூங்கா ஆண்டுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கிறது.
அண்மைய காலமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் காட்டுத் தீ ஏற்படுவது வழமையாக உள்ள நிலையில் 2023 இல் பதிவு செய்யப்பட்ட காட்டுத்தீ காரணமாக கனடா முழுவதும் 235,000 க்கும் அதிகமான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |