விஜய் கைது செய்யப்படுவாரா..! தமிழகத்தில் பரபரப்பு
Vijay
M K Stalin
Tamil nadu
By Sumithiran
''கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் மூலமாக உண்மை வெளிவரும்,'' என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் பார்வையிட்ட பின்னர் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். இது தெடார்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், '
அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை
'ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் அறிக்கை அளித்த பிறகு முழுமையாக சொல்கிறோம்.
இதற்கிடையில், அரசியல் நோக்கத்தோடு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. அந்த ஆணையத்தின் மூலமாக உண்மை வெளிவரும். உண்மை வெளிவரும் போது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
