இந்தியாவிலிருந்து இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு திடீரென வந்த தொலைபேசி அழைப்பு! பேசியது என்ன?
இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் தனது டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில், இருநாட்டு வர்த்தகம் மற்றும் பலதரப்பட்ட உறவுகள் சார்ந்த விடயங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளேன்.
அதுமாத்திரமல்லாது, வலய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் இராஜதந்திர உறவுகள் பற்றியும் பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கலந்துரையாடல் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
Good conversation with FM @DCRGunawardena of Sri Lanka. Reviewed our bilateral agenda. Also discussed BIMSTEC, IORA and other regional mechanisms. Will continue to remain in close touch.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 21, 2021