எரிபொருள் விலை குறையுமா? அமைச்சர் கம்மன்பில வெளியிட்ட தகவல்
தற்போது எரிபொருள் விலையை குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என்றும், எரிபொருள் விலைகள் அதிகரித்த ஜூன் 11 முதல் உலக சந்தையில் எரிபொருள் விலை 10% அதிகரித்துள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (17) அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப எரிபொருள் விலையை 10% அதிகரிக்க வேண்டும் என்றாலும், அவ்வாறு செய்யாமல் மக்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
துரதிர்ஷ்டவசமாக, ஜூன் 11 முதல் உலக சந்தையில் எரிபொருள் விலை 10% உயர்ந்துள்ளது. இதன்படி நாம் ஒரு லீட்டர் பெற்ரோலை ரூ .179 க்கு விற்க வேண்டும். நாங்கள் இப்போது ரூ. 157 க்கு தான் விற்கிறோம்.இதில் ஒரு பெரிய நிவாரணம் உள்ளது. ஒரு லீட்டர் டீசலை ரூ .134 க்கு விற்க வேண்டும். நாங்கள் ரூ .111 க்கு விற்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.