செம்மணிக்கு நீதி கோரி விநோத உடை போட்டியில் அனைவரையும் கண்கலங்க வைத்த சிறுவன்

Jaffna Preschool Children chemmani mass graves jaffna
By Independent Writer Oct 12, 2026 04:51 PM GMT
Report
Courtesy: linton

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் மிக சிறப்பாக இடம்பெற்றது

இந் நிகழ்வின் இறுதியில் வினோத உடை எனும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறுவர்கள் புனிதர்களின் வேடம் மற்றும் பலூன் வியாபாரி என வேடம் ஏற்று வந்த நிலையில் ஒரு சிறுவன் காரணமே இல்லாமல் என்னை பல ஆண்டுக்கு முன்னர் அம்மாவின் மார்பில் பால் அருந்திக்கொண்டு இருக்கும் போது செம்மணியில் புதைத்து விட்டார்கள் எனக்கு நீதி கிடைக்குமா என வினோத உடை தரித்து வந்த சம்பவம் பார்வையாளர்கள் மற்றும் விருந்தினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

காரணமே இல்லாமல் செம்மணியில் என்னை புதைத்தார்கள்

தம்முடைய இறப்புக்கு நீதி கேட்ட சிறுவனை, விருந்தினர் நீங்கள் யாராக வந்துள்ளீர்கள் என கேள்வி கேட்கும் போது சிறுவன் காரணமே இல்லாமல் செம்மணியில் என்னை புதைத்தார்கள் என பதிலளிக்க விருந்தினரின் கண்களில் கண்ணீர் சிந்த தொடங்கியது

செம்மணிக்கு நீதி கோரி விநோத உடை போட்டியில் அனைவரையும் கண்கலங்க வைத்த சிறுவன் | Will I Who Was Buried At Semmani Get Justice

 பின்னர் ஏன் இப்போது வந்துள்ளீர்கள்..... என கேள்வி கேட்க என் இறப்புக்கும் என்னைப் போல் புதைக்கப்பட்டவர்களுக்கும் நீதி கேட்டு வந்துள்ளேன் அதனை தொடர்ந்து எங்கு இருந்து வந்துள்ளீர்கள்... என கேள்வி கேட்க எமக்கான நீதி இந்த அரசாங்கம் தரும் என கூறி என்னுடன் புதைக்கப்பட்ட நண்பர்கள் அனுப்பி வைத்தார்கள் என தனது மழலை குரலால் பதிலளித்தார்.

எமக்கான நீதியை அநுர மாமாவிடம் வாங்கித் தாருங்கள் 

பின்னர் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என மனம் உடைந்த நிலையில் விருந்தினர் கேட்கும் போது, உங்கள் பிள்ளைகள் நாங்கள் ஏன் எதற்கு என்றே தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்த போது என்னை புதைத்தார்கள் எமக்கான நீதியை அநுர மாமாவிடம் வாங்கித் தாருங்கள் என உணர்வு ரீதியாக கேட்கும் போது பார்வையாளர்கள் மத்தியில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

செம்மணிக்கு நீதி கோரி விநோத உடை போட்டியில் அனைவரையும் கண்கலங்க வைத்த சிறுவன் | Will I Who Was Buried At Semmani Get Justice

 நீதி கேட்ட சிறுவன் தன் உடைகள் முழுவதும் பல பதாகைகளை ஒட்டிய வண்ணம் காட்சி அளித்தார் பதாகைகளில் கூறப்பட்ட விடயங்கள் பின்வருமாறு,

என் சின்னஞ்சிறு பாதங்களால் ஓடிப்பிடித்து விளையாட வேண்டிய வயதில், என்னை மண்ணுக்குள் புதைத்துவிட்டார்களே!"

"புதுமையான, அமைதியான யாழ்ப்பாணத்தை என் கண்களால் பார்க்க முடியாமல் போய்விட்டதே!"

"தாயின் மார்பில் பால் அருந்தக் காத்திருந்த எனக்கு, அடுத்து என்ன நடந்தது என்றே தெரியவில்லையே!"

"அம்மா அமைத்துத் தந்த வண்ணக் கனவுகளோடு உறங்கச் சென்ற என்னை, இருண்ட மண்ணுக்குள் உறங்க வைத்துவிட்டார்களே!"

"நாங்கள் செய்த பாவம் தான் என்ன? ஐந்து வயதுக் குழந்தைக்கு மரண தண்டனை விதித்தது யார்?" "என்னைப்போல் மண்ணில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிஞ்சுகளுக்கு இறுதிவரை நீதி கிடைக்காதா?"

"விளையாட்டுப் பொம்மைகளைக் கையில் வைத்திருக்க வேண்டிய வயதில், எங்கள் எலும்புகள் மண்ணுக்குள் கிடக்கின்றனவே!"

"ஒரு தலைமுறையின் கனவுகளையும் சந்ததியையும் ஒரே அடியில் அழித்துவிட்டார்களே, இது நியாயமா?"

"அன்றாடப் பள்ளிக்கூட மணிச்சத்தம் கேட்க வேண்டிய எனக்கு, அமைதியான சுடுகாட்டின் அமைதி மட்டுமே மிஞ்சியதா?"

"தாயின் அரவணைப்பையும் தகப்பனின் நேசத்தையும் அனுபவிக்க விடாமல் எங்களை ஏன் பிரித்தார்கள்?"

"என் சிரிப்புச் சத்தம் கேட்டிருக்க வேண்டிய வீடுகளில், இன்று என் நினைவுகள் மட்டுமே கண்ணீராக வாழ்கின்றன."

"உலகமே அமைதியைப் பற்றிப் பேசும்போது, எங்களைப் போன்ற பிஞ்சுகளின் கதறல் யார் காதிலும் விழவில்லையா?"

"காலங்கள் உருண்டோடினாலும், இந்தச் செம்மணி மண் சுமக்கும் எங்கள் வலிகளுக்கு என்றுதான் விடிவு வரும்?"

"எங்கள் உயிரைப் பறித்தவர்கள் சுதந்திரமாக வாழும்போது, நியாயம் கேட்கும் எங்கள் குரல் மட்டும் ஏன் காற்றில் கரைகிறது?"

"நாங்கள் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையைத் திரும்பத் தர முடியாது; ஆனால் எமக்கான நீதியையாவது இந்த உலகம் தருமா?" என கேள்வியாக கேட்கப்பட்டு இருந்தது 

சந்தியா எக்னலிகொட மீதான வெறுப்பு பிரசாரம் : முன்னணி ஊடக அமைப்புகள் கடும் கண்டனம்

சந்தியா எக்னலிகொட மீதான வெறுப்பு பிரசாரம் : முன்னணி ஊடக அமைப்புகள் கடும் கண்டனம்

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026