உயர்தர பரீட்சை ஒத்தி வைக்கப்படுமா- கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
A D Susil Premajayantha
Wimal Weerawansa
G.C.E.(A/L) Examination
By Sumithiran
உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு
உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்த நிலையில் குறித்த பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எவ்வித தேவையும் ஏற்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் கோரிக்கை
கல்வி பொது தராதர பத்திர உயர் தர பரீட்சையினை ஒத்திவைக்குமாறு அரசியல்வாதிகளே கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கற்பித்தல் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருகின்ற நிலையில் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய தேவை இல்லை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

