நாடு முழுமையாக முடக்கப்படுமா? சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொவிட்19 தடுப்ர்புச்செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 500 அல்லது 500ற்கு அதிகமானோர் அமரும் வகையிலான திருமண மண்டபமொன்றில் 150 பேரை மாத்திரம் அனுமதிக்கப்படுவோர். அத்துடன், 500ற்கு குறைவானோர் அமரும் வகையிலான திருமண மண்டபத்தில் 100 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குகளில் பங்கேற்க 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அரச ஊழியர்கள் அனைவரையும் அழைக்கும் சுற்றறிக்கையை மாற்றியமைத்து, கடமைக்கு அழைக்க வேண்டிய நபர்களை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, செப்டம்பர் முதலாம் திகதி வரை அனைத்து அரச விழாக்களும் இரத்து செய்யப்பட்டன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.