நாடு முடக்கப்படாது - அரசாங்கம் இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
srilanka
corona
travel restriction
By Jaso
தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நாட்டை முடக்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கான இறுதி அஸ்திரமாக அதனை வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், கொவிட் நெருக்கடியைக் கையாளும்போது அவ்வாறான தீர்மானத்தை எந்த சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கு சிறந்த வழி தடுப்பூசி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி